சென்னை,
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, கோவில்கள், பள்ளிக்கூடங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில், மூடப்பட்ட 717 கடைகளும் எந்தெந்த பகுதிகளில் செயல்பட்டு வந்தன என்பது குறித்த முழுமையான விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதில், ஒவ்வொரு கடையின் மாவட்டம், பகுதி, கடை எண் மற்றும் கடை செயல்பட்டு வந்த முழுமையான முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியல், அரசாணை எண் 129-ன் அடிப்படையில் 717 கடைகள் மூடப்பட்டதாக குறிப்பிடுகிறது.
பட்டியலில் முதல் கடை முதல் 717-வது கடை வரை வரிசை எண்ணுடன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக, நேற்று சட்டசபையில் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், 717 கடைகள் மூடப்பட்டது தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, தற்போது மூடப்பட்ட அனைத்து 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகளுடன் கூடிய முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
717 மூடப்பட்ட கடைகள் குறித்த விவரங்களை இந்த கியூ.ஆர் கோடு ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம்.