சென்னை,
நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முன்னதாக, தமிழகம் முழுவதும் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி மொத்தம் 70 % வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி குறைவான வாக்குபதிவுகள் பதிவாகி உள்ள 5 தொகுதிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளது.
குறைவான வாக்குகள் பதிவான 5 தொகுதிகள்:-
மதுரை வடக்கு - 60.83
மயிலாப்பூர் - 60.60
குளச்சல் - 60.42
கிள்ளியூர் - 57.64
பாளையங்கோட்டை - 56.15