சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் 8 தொகுதிகள் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
1)காட்டுமன்னார்கோவில்
2)செய்யூர்
3) திருப்போரூர்
4)அரக்கோணம்
5)கள்ளக்குறிச்சி
6)பண்ருட்டி
7)திண்டிவனம்
8) பெரியகுளம்
ஆகிய 8 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.