மதுரை,
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
விஜய்யை எந்த நாட்டுக்கு செங்கோட்டையன் முதல்வராக்குவார்? ஏதாவது ஒரு கல்லூரிக்கு வேண்டுமானால் விஜய்யால் முதல்வர் ஆக முடியும். அதிமுகவில் இருந்து சென்ற செங்கோட்டையனை தவெகவில் உள்ள நிர்வாகிகள் மதிப்பதே இல்லை.
செங்கோட்டையன் வயதானவர் என தவெகவினர் அவரை தள்ளிவிட்டு செல்கின்றனர். செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு. அவரை தவெகவினரே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆதவ் அர்ஜுனாவுக்கு என்ன தெரியும்? அதிமுகவை பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது.
லாட்டரி சீட்டு மூலம் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சிய ஆதவ் அர்ஜுனா எங்களை பற்றி பேசக்கூடாது. உதயநிதி எங்களை திட்டிக்கொண்டே இருக்கட்டும். திட்டத்திட்டதான் எங்களுக்கு வளர்ச்சி.
கருணாநிதி - ஜெயலலிதா போல ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையேதான் போட்டி. சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி.
இவ்வாறு அவர் கூறினார்.