சென்னை,
சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.
இதனையடுத்து இந்தநிலையில் 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சட்டசபை நேற்று மீண்டும் கூடியது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பின்னர், இந்த துறைகளில் சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், 2-வது நாளாக இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஷ பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் சரத்குமார் ஆகியோர் பதில் அளித்து பேசுவார்கள். நிறைவாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள்.
மேலும் கடலூரில் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனத்தின் கிணறுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.