தமிழக செய்திகள்

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை, உள் தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

12 மாவட்டங்களில் மழை

இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாமக்கல், கரூர், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT