தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்த இந்தியா கூட்டணி தலைவர்கள் யார் யார்? விவரம்

21 தலைவர்கள் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

மத்திய அரசு நாளை மக்களவையில் கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளித்துள்ளது. அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.

தற்போது திமுகவுக்கு 22 மக்களவை உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 8 எம்.பி.க்களும் உள்ளனர். எனவே மத்திய அரசு தொகுதி மறுவரயறை மசோதாவை நிறைவேற்ற திமுகவின் ஆதரவு முக்கிய துருப்புச் சீட்டாக மாறியுள்ளது. எனவே திமுக முடிவை மாற்றும் முயற்சியாக இந்தியா கூட்டணி தலைவர்கள், இன்று மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். இந்த சந்திப்பில் கலந்து கொண்டர் தலைவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

சோனியாகாந்தி, ராகுல்காந்தி,காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, இமாசலபிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் மா.பேபி, காங்கிரஸ் செயலாளர் பிரணவ் ஜா, மூத்த வக்கீல் கபில் சிபல், ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. மிசா பாரதி, ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. ராஜீவ் ராய், சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் வந்திருந்தனர். அதே போல் தி.மு.க. சார்பில் இந்த பேச்சுவார்த்தையில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT