மாணிக்கம் தாகூர்  
தமிழக செய்திகள்

ஆளுநரை போஸ்ட்மேன் எனக்கூறியது யார்? உதயநிதிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி

ஆளுநரை போஸ்ட்மேன் எனக்கூறிவிட்டு தற்போது போஸ்ட் மேன் வீட்டில் உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன வேலை என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆளுநரிடம் திமுக சரண்டர் ஆகிவிட்டதா? ஆளுநரை பார்த்து who are you? என்று கேட்டது இதே உதயநிதிதான். இன்று சரண்டர் ஆகிவிட்டாரா? அமலாக்கத்துறை வழக்கு அனைத்தையும் இழுத்து மூடிவிட்டார்களா? இதற்கு உதயநிதியும் திமுகவும் பதில் சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கவர்னர் பதவி வேண்டும் என நினைக்கிறோம். ஆட்டுக்கு தாடி என்று எல்லாம் காங்கிரஸ் பேசவில்லை. கவர்னர் நேர்மையாக நடக்க வேண்டும் என்றுதான் காங்கிரஸ் கட்சி பேசி வருகிறது” என்று கூறினார்.

முன்னதாக, மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது; யூ ஆர் ஜஸ்ட் எ போஸ்ட்மேன்!" என்று மேடையில் முழங்கியவர்கள், இன்று அதே 'தபால்காரரிடம்' தபால் கொடுக்க வரிசையில் நிற்கிறார்கள்!அன்று அதிகாரம் கையில் இருந்தபோது "ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று கொள்கை முழக்கம்; இன்று பதவி போனதும் ஆளுநர் மாளிகை வாசலில் சரணாகதி அடைந்துள்ளது திமுக!மொத்தத்தில், உதயநிதியின் வழி அது ஆளுநர் வழி மற்றும் பாஜக வழி!” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT