சென்னை,
சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தவெக அரசு நடத்த வேண்டும். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது. இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக கட்சிகள் ஆலோசனை நடத்துகிறோம். பாமக யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்போம். எங்களின் நிலைப்பாட்டை அறிவித்த பின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார். ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளார். அந்த நிறுவனம் 30 ஆண்டுகாலமாக சென்னையில் இயங்கி வருகிறது. இங்கையே ஒப்பந்தம் கையெழுத்து போட்டிருக்கலாம். சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தவறான முடிவு. பட்டினப்பாக்கம் மிகவும் குறுகிய, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. சென்னைக்கு வெளியே 1,000 ஏக்கரில் நிர்வாக நகரம் கட்டி தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் எந்த ஒரு திட்டம் வந்தாலும் மக்கள் வரவேற்க கூடிய திட்டமாக மக்கள் எதிர்கிற திட்டமாகவும் இருக்க கூடாது. மக்கள் ஆதரிக்கிற ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். இப்போது மீனவர்கள் போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். சென்னையின் வெளிபுறத்தில் இருந்தாலும் பரவாயில்லை அங்கு தலைமைசெயலகம் அமைக்கப்படலாம் அல்லது கலைஞர் கட்டிய ஓமந்தூரார் உள்ளது அதில் கொண்டு வரலாம். மக்களுக்கு பாதிப்பு இல்லாத எந்த இடத்தில் வந்தாலும் அதை வரவேற்போம். பரந்தூரில் புதிய தொழிற்சாலை அமைத்தால் நானே சென்று போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.