தமிழக செய்திகள்

த.வெ.க.வில் சேர்ந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமியின் உறவினர் பதில்

எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எடப்பாடி தொகுதியில் த.வெ.க.வுக்காக இனி கடுமையாக பணியாற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமியின் உறவினர் கூறினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் உறவுக்கார பெண் (தூரத்து உறவு முறை சகோதரி மகள்) தொழிலதிபர் மேனகா த.வெ.க.வில் நேற்று இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து அமைச்சர் ஆனந்த் வரவேற்றார்.த.வெ.க.வில் இணைந்தது ஏன்? என்பது குறித்து மேனகா கூறியதாவது:-எடப்பாடி எனது தொகுதி. என்னுடன் சேர்ந்து திருப்பூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் இணைந்து இருக்கிறார்கள்.

மக்களின் நம்பிக்கை பெற்றுள்ள மக்களாட்சியில் நாங்களும் இருந்து பணியாற்ற விரும்புகிறோம். எனவே த.வெ.க.வில் இணைந்து இருக்கிறோம். வேறு எந்த எதிர்பார்ப் பும் இல்லை. எடப்பாடி தொகுதியில் த.வெ.க.வுக்காக இனி கடுமையாக பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT