தமிழக செய்திகள்

விசிகவில் இருந்து வெளியேறியது ஏன்? பனையூர் பாபு விளக்கம்

ஊடகத்தினரை சந்திக்கும் பொழுது, விஜய் மேல் சந்தேகம் இருக்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு இன்று அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில் தி.மு.க.வில் இணைந் தார்.அப்போது மு.க.ஸ்டாலி னுக்கு பொன்னாடை அணி வித்து வெள்ளி செங்கோல் வழங்கினார். பனையூர் பாபுவுடன் 100-க்கும் மேற் பட்ட ஆதரவா ளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர்.

தாய்க்கழகம்

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பனையூர் பாபு கூறியதாவது: ”தாய் கழகமான திமுகவில் இன்று இணைந்திருக்கிறேன். தேர்தலில் போட்டியிட விசிகவில் வாய்ப்பு தராததால், நான் விசிகவை விட்டு விலகவில்லை. வேட்பாளர் அறிவிப்பில் இருந்து, வாக்கு எண்ணிக்கை வரை அந்தக் கட்சியிலேயே இருந்தேன். அதற்கு பின் நடந்த நிகழ்வுகளாலேயே விசிகவை விட்டு வெளியேறி இருக்கிறேன். அம்பேத்கர் மற்றும் பெரியார் கொள்கைகளை பெயரளவில் மட்டுமே தவெக வைத்திருக்கிறது.

விஜய் மேல் சந்தேகம்

ஊடகத்தினரை சந்திக்கும் பொழுது, விஜய் மேல் சந்தேகம் இருக்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார். தவெகவிற்கு திருமாவளவன் ஏன்? ஆதரவு அளித்துள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை. இதுகுறித்து என்னிடம் பேசவில்லை. விசிகவிற்கும் எழுச்சி தமிழருக்கும் என் பங்கு மிக அளப்பரியது. வெளிச்சம் தொலைக்காட்சியின் உரிமையாளர் நான்தான். என்னுடைய முழு பணத்தில் தான் தொலைக்காட்சி ஆரம்பித்தேன். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் வெளிச்சம் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் திருமாவளவனுக்காக தொடங்கப்பட்ட வெளிச்சம் தொலைக்காட்சி அவருக்காகவே தொடர்ந்து செயல்படும்”என்றார்.