செங்கல்பட்டு,
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, விஜய் மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். அதவேளை, விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், விவாகரத்துகோரி விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த 24ம் தேதி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல கோர்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு ஏப்ரல் 20ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
விஜய்-ஐ விவாகரத்து செய்ய சங்கீதா முடிவெடுத்ததற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரம்:-
விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சங்கீதா குற்றஞ்சாட்டியுள்ளார். இது விவாகரத்திற்கான காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் தன்னை சுதந்திரமாக நடமாட விடாமல் விஜய் தடுத்தார் என்றும் சங்கீதா விவாகரத்து மனுவில் கூறியுள்ளார்.
போதிய சுதந்திரம் கொடுக்காமல் தனக்கு பல்வேறு நிதி கட்டுப்பாடுகளை விஜய் விதித்தார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2025 நவம்பர் 9ம் தேதி இரு தரப்பும் பரஸ்பரம் விவாகரத்திற்கு முயன்றபோது விஜய் மறுத்ததாகவும் மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளார்.
விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அது குறித்து தனக்கு தெரியவந்ததையடுத்து அந்த தொடர்பை நிறுத்தி கொள்வதாக கூறியதாகவும் ஆனாலும் அவரின் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் தென்படவில்லை என்று சங்கீதா தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக விஜய் மனதளவில் தன்னை பிரிந்து வாழ்ந்து வருவதாக விவாகரத்து மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளார்.