தமிழக செய்திகள்

கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்காதது ஏன்? - அமைச்சர் நிர்மல்குமார் பதில்

எவ்வளவு தூரம் அரசு துறையை கெடுத்து வைத்து இருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிய வேண்டுமென அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

சென்னை,

சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜாவை அமைச்சர் நிர்மல் குமார் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசிய்தாவது:-

கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காதது ஏன்?

இன்று நடைபெற உள்ள கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்காதது பற்றி கேட்கிறீர்கள். தேர்தல் நேரத்தில்தான் கட்சிகளுடன் கூட்டணி இருக்கும் தி.மு..க உடனும் அவர்கள் அப்படி தான் தொகுதி உடன்பாடு வைத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டு கட்சியினர் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு தொடரும் என்று தானே கூறியிருக்கிறார்கள். இந்த அரசு மக்களுக்கான அரசாகவே இருக்கும்.

மிசா தொடர்பாக அதிக விவாதங்கள் நடந்து விட்டது. தி.மு.க. செய்த துரோகங்கள் தவறுகளில் இருந்து தமிழ்நாட்டை எப்படி மாற்றி வருகிறோம் என்று சொல்லித்தானே ஆகவேண்டும். எவ்வளவு தூரம் அரசு துறையை கெடுத்து வைத்து இருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிய வேண்டும். டாஸ்மாக்கில் வசூல் மட்டும் செய்து கொண்டு இருந்தவர்களை வைத்துதான் கடந்த தி.மு.க. ஆட்சியை நடத்தி உள்ளார்கள். இதனை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டாமா?

தவறை சொல்வதில் என்ன தவறு

தி.மு.க. ஆட்சியில் ரத்தீஷ் என்பவர் புரோக்கர் போல செயல்பட்டுள்ளார். அவர் 5 துறைகளில் வசூல் செய்யும் பணிகளை செய்து உள்ளார். அதனை எப்படி சொல்லாமல் இருக்க முடியும். இப்படி அந்தந்த காலகட்டத்தில் தி.மு.க.வில் என்ன மாதிரியான நபர்கள் இருந்தார்கள் என்பதை சொல்லத்தானே வேண்டும். மக்கள் இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட சிஸ்டமை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதை எப்படி மாற்ற வேண்டும் என்பதையும் மக்களிடம் சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் புதிதாக ஒரு உயிர் கொடுத்துக் கொண்டு உள்ளோம். ஒரு செடியை வளர்த்துக் கொண்டு உள்ளோம். புரையோடிக் கொண்டிருந்த மரத்தை சாய்த்து விட்டு புது செடியை வளர்த்து வருகிறோம் அடிப்படையில் இருந்து மாற்றுகிறோம். எதை செய்ய முடியுமோ அனைத்தையும் தமிழக முதல்- அமைச்சர் செய்கிறார். ஒவ்வொரு நாளும் கண்ணும் கருத்துமாக மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்கிறார். எப்படி எல்லாம் அதனை அரசுக்கு குடைச்சல் கொடுக்க முடியுமோ செய்து வருகிறார்கள். கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் மீனவர்கள் பாதிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்தது நீங்கள்தான். இப்படி தி.மு.க. செய்த தவறை சொல்வதில் என்ன தவறு.

முதல்-அமைச்சரின் முடிவு

இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பது பற்றி முதல்-அமைச்சர்தான் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT