சென்னை,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“அரசு சார்பில் ஒரு எதிர்கால திட்டம் போடப்படும்போது அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து ஆலோசிக்க வேண்டும். மேலும் எந்த பகுதியில் ஒரு திட்டம் வருகிறதோ அந்த பகுதிக்கு சென்று அந்த மக்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், அந்த பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள மகக்ளிடம் பேசி, விமான நிலையம் வேண்டாம் என்ற முடிவுக்கு முதல்-அமைச்சர் வந்தார். பரந்தூர் மக்களிடம் கேட்டதுபோல் பட்டினப்பாக்கம் மக்களிடம் முதல்-அமைச்சர் ஏன் க்ஜருத்து கேட்கவில்லை?
இன்று கம்யூனிஸ்ட்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும், மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கிறார்கள். அதே போன்று அனைத்து கூட்டணி கட்சிகளும் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.