தமிழக செய்திகள்

எதற்காக தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டும்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம்

விருதுநகரில் இன்று கூட்டம் என்று சொன்னதும், எனக்குள் புது உற்சாகம் உண்டானது என மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

விருதுநகரில் தி.மு.க. இளைஞரணியின் தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடக்கிறது. இதையொட்டி, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, இந்த வீடியோ எதற்காக என்றால், விருதுநகரில் நடக்கும் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் இளைஞர்களுக்காக.

1980-ம் ஆண்டில், நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது தொடங்கப்பட்ட அணி, இளைஞரணி. 1949-ம் ஆண்டில் இளைஞர்களால் தொடங்கப்பட்ட தி.மு.க. என்ற இந்த பேரியக்கத்தின் அடுத்த தலைமுறையாக-மீண்டும் இளைஞர்களிடம் நம்முடைய தி.மு.க.வை கொண்டு சேர்க்க-இந்த அணியை தொடங்கினோம்.

அன்றைக்கு என்னுடன் களத்தில் நின்று கட்சியை வளர்த்த இளைஞர்கள்தான், இன்றைக்கு உங்கள் முன்னால், அமைச்சர்களாக, எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக, மாவட்ட செயலாளர்களாக பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள். எங்களுக்கு அடுத்தபடியாக, இப்போது, இந்த இயக்கத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, அந்த கடமையை, தம்பி உதயநிதி சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.

தி.மு.க.வின் மீது, எப்போதும் வன்மத்தோடு இருக்கும் எதிரிகள் என்ன கட்டமைத்தார்கள்? இளைஞர்கள் இனி தி.மு.க.விற்கு வருவார்களா என்று சந்தேகம் எழுப்புவது போன்று, தங்களுடைய ஆசைகளை வெளிப்படுத்தி கொண்டு இருந்தார்கள். அதையெல்லாம் உடைத்து, உதயநிதி, இளைஞரணிக்கு இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து, சாதனை செய்திருக்கிறார்.

இது போதாது என்று, மண்டல அளவில் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு என்ற பெயரில் மாநாடுகளை நடத்துகிறார். ஏற்கனவே, திருவண்ணாமலையில் ஒன்றரை லட்சம் நிர்வாகிகளை கூட்டி, வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை நடத்தி விட்டார். மிக கச்சிதமாக நடந்த அந்த மாநாட்டை பார்த்து, எதிர்க்கட்சிகளில் இருக்கும் பலருக்கும், தூக்கம் போய்விட்டது.

இளைஞரணியின் ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்களாக இருக்கும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான நிர்வாகிகளை சேர்த்து, கிளை வார்டு பாகம் அளவிலும் 5 லட்சம் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ‘மிஷன் மோட்’-ல் வேலை செய்திருக்கிறார். அதிலும், இதை அவர் செய்து காட்டியிருக்கும் செயல்முறையே மலைப்பை ஏற்படுத்துகிறது.