மதுரை,
தென்காசியில் பனைத் தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்திய வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்றக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, புதுச்சேரி, கேரளாவில் கள் விற்பனைக்கு அந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளது.தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு தமிழக அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? அரசு செயல் திட்டத்தை வகுத்து கள் விற்பனையை அனுமதிக்கலாம், வருவாயும் கிடைக்கும் என நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்தார்.
அத்துடன் கள்ளின் மருத்துவ பயன் என்ன என்பது குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.