சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு முதலில் நிதித்துறை இலாகா ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் திடீரன வருவாய்- பேரிடர் நிர்வாகத்துறை அமைச்சராக மாற்றப் பட்டுள்ளார். அவரிடம் இருந்த நிதித்துறை, மரிய வில்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துறை மாற்றம் ஏன்? என அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து செங்கோட்டையன் கூறியதாவது;
“முதல்-அமைச்சரிடம் நான் வைத்த வேண்டுகோளின் அடிப்படையில்தான் இலாகா மாற்றப்பட்டது. நிதித் துறை என்றால் சென்னையை சார்ந்து முழுமையாக என் பணிகளை ஆற்ற வேண்டும். வருவாய்த் துறை மூலம் எல்லா நலத் திட்டங்களையும் உருவாக்க முடியும். வருவாய்துறை மூலம் மக்கள் பணி செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய்யிடம் கேட்டேன். உள்ளத்தில் இருப்பதை கூறினேன். முதல்-அமைச்சர் துறையை மாற்றினார். மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.”
இவ்வாறு அவர் கூறினார்.