சென்னை,
பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இடைத்தேர்தலில் பாமக யாருக்கும் ஆதரவு தெரிவிக்காதது ஏன்? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து சவுமியா அன்புமணி பேசியதாவது;
”மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடப் போவதில்லை என தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். அத்துடன், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்துள்ளார்.
பாமகவின் இந்த முடிவுக்கு காரணம் இது தான். அனைத்துக் கட்சிகளின் உடன்பாட்டுடன் பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்ற ஆலோசனையை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே பாமக தலைவர் அன்புமணி வழங்கியிருந்தார். ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.