முதல்-அமைச்சர் விஜய் அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு முதலில் நிதித்துறை இலாகா ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மக்களுடன் நேரடியாக தொடர்புடைய ஏதாவது ஒரு துறையை தனக்கு ஒதுக்கி கொடுத்தால் நன்றாக இருக்கும் என முதல்-அமைச்சர் விஜய்யிடம் அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற முதல்-அமைச்சர் விஜய், மக்களுடன் நேரடி தொடர்புடைய வருவாய்த்துறையை செங்கோட்டையனுக்கு ஒதுக்கினார். இதையடுத்து நிதி அமைச்சராக இருந்த அவர் வருவாய்- பேரிடர் நிர்வாகத்துறை அமைச்சராக மாற்றப் பட்டுள்ளார். இதனால் அமைச்சர் செங்கோட்டையன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தனர்.