தமிழக செய்திகள்

விஜய்- ராகுல் காந்தி சந்திப்பு ரத்தானது ஏன்? காங். எம்.பி., கிறிஸ்டோபர் திலக் விளக்கம்

தமிழக முதல் அமைச்சர் விஜய் இன்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக் டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதல் அமைச்சர் விஜய் அரசு முறை பயணமாகவே வந்துவிட்டு சென்றதாக நினைக்கிறேன். பிரதமரை பார்த்துவிட்டு சென்றுவிட்டார். வரும் ஜூன் 11 ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல் அமைச்சர் விஜய் டெல்லி வருகிறார்.

கண்டிப்பாக அந்த முறை சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திப்பார். தற்போது கர்நாடக தலைவர்கள் வந்துள்ளனர். ஜார்க்கண்ட் ராஜ்யசபா எம்பி விவகாரம் கடந்த 2 நாட்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுபோன்ற பல முடிவுகளை பற்றி காங்கிரஸ் கட்சியில் ஆலோசனை நடந்து கொண்டு வருகிறது. இந்த நெருக்கடிக்குள் விரிவாக பேச முடியாது என்பதால் இந்த சந்திப்பு ரத்து ஆகியிருக்கலாம். சிலை திறப்பு விழாவையும் ஒத்திவைத்துவிட்டு விஜய் போயிருக்கிறார். மற்றபடி இதில் யூகத்திற்கு இடமில்லை" என்று கூறினார்.