தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீடித்த வறண்ட வானிலைக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா பகுதிகளில் இருந்து தெற்கு உள் கர்நாடகா வரை சுமார் 900 மீட்டர் உயரத்தில் ஒரு காற்ற ழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதன்படி நேற்று அதிகாலை முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் இடி, மின்ன லுடன் பலத்த மழை பெய்தது. அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை சுமார் 9 மணி வரை மிதமான மழை பெய்தது. அதன்பிறகு அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இந்த மழை காரணமாக ரோட்டில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழை யால் 2 வீடுகள் பகுதியாக சேதம் அடைந்து உள்ளன. தூத்துக்குடியை பொறுத்தவரை காலையில் லேசான சாரல் மழை பெய்தது. அதன்பிறகு லேசான வெயில் அடித்தது.
கயத்தாறில் கடந்த ஒரு மாதமாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டியது. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 4.20 மணியளவில் குளிர்ந்த காற்று வீசியது. திடீரென கருமேகங்கள் திரண்டு சுமார் 1 மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் கயத்தாறு மேலபஜார், கீழ் பஜாரில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இத னால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதேபோன்று, செட்டி குறிச்சி, இராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி, சூரியமினிக்கன், வெள்ளாளன்கோட்டை, சாலை புதூர், தெற்கு இலந்தைகுளம். வடக்கு இலந்தைகுளம், ஆத்தி குளம், மானங்காத் தான், தலையால் நடந்தான்குளம், தெற்கு மயிலோடை, வடக்கு மயிலோடை வாகைத்தாவூர் சீனி வெள்ளாளபுரம் மழை பரவலாக பெய்தது. இதனால் சாலையோர ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய், குளங்களில் தண்ணீர் தேங்கியது. அனல்காற்று வீசிய இப்பகுதியில் இதமான சூழல் உருவானதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று காலை 6 மணி முதல் ஏரல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து விட்டு, விட்டு மழை பெய்தது. காலை 9 மணி வரை மழை நீடித்தது. தொடர்ந்து பகல் முழுவதும் சாரல் மழை பெய்தது. இதனால் ஏரல் மெயின் பஜார் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோன்று திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், உடன்குடி, கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது