குமரி,
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த குழித்துறை பகுதியை சேர்ந்த 35 வயது லாரி டிரைவருக்கு, 32 வயதில் மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. தற்போது இவர்கள் சென்னித்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர்.
லாரி டிரைவரின் மனைவி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வேலைக்கு சென்று வருகிறார். அங்கு அவருக்கும். பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வாலிபர், கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார். அங்கு லாரி டிரைவர் இல்லாததால் அவர் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதற்கிடையே வேலை முடிந்ததும் லாரி டிரைவர் அங்கு வர, மனைவி, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எனினும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்த டிரைவர், வீட்டின் அறை கதவை பூட்டி திருடன், திருடன் என கத்தினார். மேலும் மார்த்தாண்டம் போலீசாருக்கும். உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார். உடனே திரண்டு வந்த உறவினர்கள் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். அந்த சமயத்தில் வந்த போலீசார், வாலிபரை மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது தான் திருடவில்லை என்றும், எனக்கும். அந்த பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அந்த ரீதியில் அவரை சந்திக்க சென்றதாகவும் போலீசாரிடம் வாலிபர் கூறியுள்ளார். பிறகு இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போது, தடம் மாறி சென்ற மனைவியு டன் இனி வாழ மாட்டேன் என டிரைவர் கூறினார். மேலும் அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.