கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பிறந்தநாள் பரிசை வாங்க மறுத்த மனைவி... வாலிபர் எடுத்த விபரீத முடிவு

பிறந்தநாள் பரிசை மனைவி வாங்க மறுத்ததால் வாலிபர் மனமுடைந்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் தங்கராசு மகன் ஹரிஹரசுதன் (31 வயது). இவரது மனைவி சர்மிளா. இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. டிரைவரான ஹரிஹரசுதன் லாரி ஓட்டுவதால் 3 தினங்களுக்கு ஒரு முறைதான் வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது.

பிறந்த நாள் பரிசு வாங்க மறுப்பு

இந்த நிலையில் வருகிற 26-ந்தேதி சர்மிளாவுக்கு பிறந்தநாள். இதற்காக நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த ஹரிஹரசுதன் புதிய செல்போனை பிறந்தநாள் பரிசாக மனைவிக்கு வாங்கிக் கொண்டு வந்துள்ளார். பின்னர் அவர் மனைவியிடம் செல்போனை கொடுத்துள்ளார். அப்போது சர்மிளா செல்போனை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹரிஹரசுதனை, அவரது தாய் மற்றும் சகோதரர் சமாதானப்படுத்தினர்.

தற்கொலை

இந்த நிலையில் ஹரிஹரசுதன் நேற்று அதிகாலை வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதைப்பார்த்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஹரிஹரசுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.