தமிழக செய்திகள்

ஊட்டியில் காட்டு யானைகள் உலா: பொதுமக்கள் பீதி

காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா மலைச்சிகரம் பகுதி யில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானை நடமாடியது. தகவல் அறிந்த வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். அதோடு தொட்டபெட்டா மலைச்சிகரத் துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த யானை அங்கிருந்து குன்னூர் வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றது. இதைத்தொடர்ந்து தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட் டது.

ஊட்டி-குன்னூர் இடையே உள்ள பகுதிகளில் காட்டு யானை சுற்றித்திரிந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தி னம் இரவு ஊட்டி நகரில் பன் சிட்டி பகுதியில் ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக உலா வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்து வீடுகளுக்குள் முடங்கினர். குடியிருப்புகளை சுற்றி யானை உலா வருவதால், காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT