சென்னை,
சென்னை ஐ.ஐ.டி.யில் செயற்கை நுண்ணறிவு மையம் என்ற பல்துறை ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு ஆளுகைக்கான தொழில்துறை மாநாட் டில் ஏ.ஐ. தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
'இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு வேலையை மறு சீரமைக்கிறது, பணி-சார்ந்த கட்டமைப்பின் மூலம் பயன்பாடு, இடப்பெயர்வு, புதிய பொறுப்புகள், வேலைகளின் மாறும் அமைப்பைப் புரிந்துகொள்ளுதல்' என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுக்குறித்து சென்னை ஐ.ஐ.டி. வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி தலைவர் லராமன் ரவீந்திரன் கூறும்போது, "செயற்கை நுண்ணறிவு எப்போதும் வேலை களைப் பறித்துவிடும் என்ற கருத்து தவறானது. பெரும்பாலான வேலைகளில் பலவிதமான பணிகள் உள்ளன.
அவற்றில் சில வற்றை மட்டுமே செயற்கை நுண்ணறிவால் செய்ய முடியும். இதன் தாக்கம் என்பது அப்பணிகள், தொழிற்துறை, செயற்கை நுண்ணறிவுக்கான விதிமுறைகள், செயற்கை நுண்ணறிவு பயன் பாட்டுக்கான செலவு ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கும்" என்றார்.