லண்டன் 
தமிழக செய்திகள்

லண்டன் செல்லும் முதல்-அமைச்சர் விஜய், நடிகர் அஜித்தை சந்திக்கிறாரா?

சினிமாவில் பரம போட்டியாளர்களாக கருதப்பட்டாலும் விஜய் - அஜித் இடையே நல்ல நட்புறவு நிலவுகிறது.

சென்னை,

தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்-அமைச்சர் விஜய் வருகிற 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை லண்டனில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த பயணத் தின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன் னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் மற் றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளார்.

இந்த நிலையில், லண்டன் செல்லும் முதல்-அமைச்சர் விஜய், நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண வாய்ப்பு இருப்ப தாக கூறப்படுகிறது. லண்டனில் வருகிற 11, 12-ந்தேதிகளில் மிச்செலின் லீ மென்ஸ் கார் பந்தயம் நடைபெற இருக்கிறது. இதில் அஜித்குமார் அணி பங்கேற்கிறது. இதனால் லண்டனில் தனது நண்பர் அஜித்குமாரை முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், கார் பந்தயத்தை நேரில் பார்க்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சினிமாவில் பரம போட்டியாளர்களாக கருதப்பட்டாலும் விஜய் - அஜித் இடையே நல்ல நட்புறவு நிலவுகிறது. முதல்-அமைச்சர் விஜய்க்கு பல சந் தர்ப்பங்களில் அஜித்குமார் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக் கிறார். சமீபத்தில் கூட சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் தமிழகத்தில் மோட் டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்ற விஜய்யின் அறிவிப்புக்கு. அஜித்குமார் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT