தமிழக செய்திகள்

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமின் கிடைக்குமா? - இன்று விசாரணை

கைதுக்கான காரணங்களை தெரிவிக்காதது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என மார்க்கண்டேயன் தரப்பில் வாதிடப்பட்டது.

சென்னை,

தி.மு.க. எம்.எல்.ஏ.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில், விளாத்திகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், அவதூறாக பேசியதாக தூத் துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு மார்க்கண்டேயன் மனு தாக்கல் செய்தார்.

சட்டத்துக்கு எதிரானது

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மார்க்கண்டேயன் தரப்பில், "சட்டசபை கதவுகள் பூட் டப்படும் எனக்கூறிய முதல்-அமைச்சருக்கு பதிலளிக்கும் வகையில்தான் எம்.எல்.ஏ. பேசினார். கைதுக்கான காரணங்களை தெரிவிக்காதது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்ப தால், மனுதாரரை கோர்ட்டு காவலில் சிறையிலடைத்து தூத்துக்குடி கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.

கைது செய்வதற்கு முன்பு விசாரணைக்கு வரும்படி போலீசார் நோட்டீஸ் கொடுக்கவில்லை. கடந்த 18-ந்தேதி நடந்த சம்ப வத்துக்கு 19-ந்தேதி நள்ளிரவில் புகார் அளிக்கப்பட்டு, 20-ந்தேதி அதிகாலையில் வழக்குப்பதிவு செய்து, அன்றைய தினம் மனுதாரரை போலீசார் கைது செய்துள்ளனர். எந்த ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தப்படவில்லை. பொது அமை திக்கு பங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் மனுதாரர் பேசவில்லை" என்று வாதிடப்பட்டது.

ஜாமின் கிடைக்குமா?

மனுதாரர் தரப்பு வாதங் கள் முடிவடையாததை அடுத்து விசாரணையை இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். அதன்படி மார்க்கண்டேயன் ஜாமின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதில் அவருக்கு ஜாமின் கிடைக்குமா? அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.