சென்னை,
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அதிமுகவின் முக்கிய தொகுதியாக உள்ளது. ஆனால் இந்த தொகுதி பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் ஒன்றாக உள்ளது. இதனை அதிமுக தாங்களே மீண்டும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொகுதியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகத்திற்காக கேட்கப்படுவதாக தெரிகிறது. அந்த தொகுதியினை கேட்டுபெறுவதற்காக அந்த மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முயற்சியை மேற்க்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக பாஜகவிடம் பேசிய அதிமுக தலைமை அதற்கு பதிலாக அவர்கள் கேட்ககூடிய தொகுதியினை கொடுக்கவும் அல்லது வேறு தொகுதியை கொடுக்கவும் முனைப்புகாட்டி வருகிறது.
பாஜகவில் இருந்து கந்தர்வக்கோட்டை தொகுதிக்கு பதிலாக விருதுநகர் அல்லது சென்னையில் ஒரு தொகுதியை கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் இரண்டு தலைமைகளுக்கு தொலைப்பேசி வாயிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
அதற்கு முயற்சி செய்யும் வகையில் சி.விஜயபாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து 4வது நாட்களாக சந்தித்துப்பேசி வருகிறார். இது குறித்த முடிவுகள் ஒரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.