அமைச்சர் நிர்மல்குமார் 
தமிழக செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்பு? - அமைச்சர் நிர்மல்குமார் பதில்

2 மணிக்கு முடிய வேண்டிய சட்டசபை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் கூறீயுள்ளார்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பாரா? என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார்.

மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் கோவில் கும்பாபிஷேகத்தை அருகில் காண அனுமதிக்கப்படுவார்கள்.

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்பது குறித்து இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய இடத்தில், முதல்-அமைச்சர் வருவது இன்னும் கூட்டத்தை அதிகரிக்கும்; அதற்கான சாத்தியக்கூறு இப்போது வரைக்கும் இல்லை.

வட்டாட்சியர் மீது நடவடிக்கை

கலெக்டருக்கு தெரியாமல் குஜிலியம்பாறை வட்டாட்சியர், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரி விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு தேவையான வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.