மதுரை,
திருப்பரங்குன்றம் மலை மற்றும் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் பகுதி காவல்துறையின் தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி மலை உச்சித் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தைத் தொடர்ந்து அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மலை உச்சி தூண் பகுதியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க மலை அடிவாரம் முதல் உச்சி வரை துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மலைப் பாதை மற்றும் தூண் அமைந்துள்ள பகுதிகளைக் கண்காணிக்கப் புதிதாக 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகளும் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய அதிநவீனமுகத்தைக் கண்டறியும் கேமராக்களும் உள்ளன முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.