தமிழக செய்திகள்

தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் ரத்து?

பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி முடிந்தது.

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் கடந்த ஆகஸ்டு 5-ந்தேதியன்று திருத்திய பட்ஜெட்டை த.வெ.க. அரசின் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி முடிந்தது.

பொதுவாக ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் சட்டசபை கூட்டப்பட வேண்டும். கடந்த சட்டசபை கூட்டத்தொடர் முடிந்து 2 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. வழக்கமாக நவம்பர் அல்லது டிசம்பரில் சட்டசபை கூட்டம் 3 அல்லது 4 நாட்கள் கூட்டப்படுவதுண்டு. அப்போது துணை மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்படும்.

ஆனால் சட்டசபை கூடி 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், துணை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யவும் வாய்ப்பு இல்லை என்று சட்டசபை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே குளிர்கால கூட்டத் தொடர் என்று பொதுவாக அழைக்கப்படும் சட்டசபை கூட்டம், இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT