சென்னை,
அமைச்சர் அருண்ராஜ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மருத்துவ பணியாளர்களின் போராட்டம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியதாவது;
“கடந்த வாரம்தான் மருத்துவ பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடமும், முதல்-அமைச்சரிடமும் இதுகுறித்து பேசி விரைவில் அறிவிப்பு வெளியிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தோம். பேச்சுவார்த்தை முடிந்த 5 நாட்களில் மீண்டும் போராடுவதா.? உடனடியாக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இது எந்த வகையில் நியாயம்? போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.” என்றார்.
மேலும், கொளத்தூர் எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த கேள்விக்கு, அவரது உடல்நிலை நன்றாக உள்ளது என்று தெரிவித்தார்.