சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், பிரியதர்ஷினி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எனது கணவர் சுதர்சன் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனக்கு கடந்த அக்டோபர் 17-ந்தேதி குழந்தை பிறந்தது. எங்களது குடும்ப வழக்கப்படி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் முடி காணிக்கைச் செலுத்த வேண்டும். இதற்காக சிறையில் உள்ள எனது கணவர் தலைமுடி மற்றும் தாடி, மீசையை எடுக்காமல் 1 வளர்த்து வந்தார்.
ஆனால், சிறைத்துறை அதிகாரிகள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தலைமுடி வளர்க்க எனது கணவருக்கு விதிவிலக்கு அளிக்கக்கோரி நான் கடந்த 13-ந்தேதி அளித்த மனுவும் பரிசீலிக்கப்பட வில்லை” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறைத் துறை தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் எஸ்.யோகராஜ சேகர், உடல்நல பிரச்சினைகள் இருந்தால்தான், முடிவெட்டு வதை கட்டாயம் எனக் கூறுவோம். மனுதாரர் கணவர் விவகாரத்தில், அதுபோன்ற உத்தரவு எதையும் கடலூர் சிறைத்து றைக் கண்காணிப்பாளர் பிறப்பிக்கவில்லை என்றார். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார். மேலும், “தலைமுடி வளர்க்கும் பிரச்சினைக்கு கூடவா ஐகோர்ட்டுக்கு வருவீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.