தமிழக செய்திகள்

சென்னையில் நாளை காற்றாலை மின்சார மாநாடு

எரிசக்தித்துறை மந்திரி பிரஹலாத் ஜோஷி தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

தமிழகம் இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை மின்சார உற்பத்தி மையங்களில் ஒன்றாக பல ஆண்டுகளாக திகழ்கிறது. தமிழகத்தின் சமவெளிகள் மற்றும் மலைப்பாதைகள் எங்கும் காற்றாலைகள் பரவியுள்ளன.

இந்த நிலையில், சென்னையில் இந்தியாவின் முதன்மையான காற்றாலை மின்சார நிகழ்வான ‘விண்டர்ஜி இந்தியா'வின் 8-வது மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் தொடக்கவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை மந்திரி பிரஹலாத் ஜோஷி தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணை மந்திரி ஸ்ரீபாத் யெசோ நாயக், தமிழ்நாடு மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

இதில் 350 கண்காட்சி அரங்குகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின், 400-க்கும் அதிகமான பிரதிநிதிகள், 20,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். பழைய காற்றாலைகளை புதுப்பிக்கும் திட்டம் வாயிலாக தமிழகத்திற்கு புதிய முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.

SCROLL FOR NEXT