தமிழக செய்திகள்

தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்து - அன்புமணி ராமதாஸ்

கல்வியே அழிக்க முடியாத செல்வம்; அதுவே வாழ்வில் ஏற்றத்தை வழங்கும் என்பதில் நம்பிக்கைக் கொண்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.

சென்னை,

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உழைப்புக்கும், உயர்வுக்கும் துணை நிற்கும் கருவிகளுக்கு மரியாதை செலுத்தும் ஆயுத பூசை, கல்வி மற்றும் கலைகளைத் தொடங்குவதற்கு உகந்த நாளாகக் கருதப்படும் சரஸ்வதி பூசை ஆகியவை இன்றும், நாளையும் கொண்டாடப்படும் நிலையில், அவற்றைக் கொண்டாடும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்பையும், தொழிலையும் கொண்டாடுவதுடன் அதற்கு உறுதுணையாக இருக்கும் கருவிகளுக்கு நன்றி செலுத்துவது தமிழர்களின் தனிப்பண்பு. அதேபோல், கல்வியே அழிக்க முடியாத செல்வம்; அதுவே வாழ்வில் ஏற்றத்தை வழங்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.

ஆயுதபூசையும், சரஸ்வதி பூசையும் கொண்டாப்படும் இந்த நாள்களில், தமிழ்நாட்டில் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஆகியவை அனைவருக்கும் வசமாக வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT