சென்னை,
ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“எஸ்.ஐ.ஆர். பணியில் தவறுகள் நடந்துள்ளது. அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் அந்த தவறுகளின் வீரியத்தைப் பொறுத்தவரை, பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆண்ட மாநிலங்களில் அதன் வீரியம் குறைவு.
அதே சமயம், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி(எஸ்.ஐ.ஆர்.) இல்லாமல் இருந்து, நம்முடைய இன்றைய முதல்-அமைச்சர் விஜய், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எல்லா இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருந்தால், 108 அல்ல, 200 தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெற்றிருக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.