சென்னை,
150 பவுன் நகைகளுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் கைது
சென்னை வடபழனியை சேர்ந்தவர் ஆதித்தன். இவரது மனைவி இலக்கியா. இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோர் சமத்ததுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் இலக்கியா வீட்டிலிருந்த 150 சவரன் நகைகள் மற்றும் குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிலிருந்து மாயமானார்.
மனைவியை காணவில்லை என ஆதித்தன் பல இடங்களில் தேடி அலைந்தார். ஆனால் மனைவியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆதித்தன் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நகையை திருடி வீட்டை விட்டு சென்ற இலக்கியாவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தியபோது, இலக்கியா கேரளத்தில் உள்ள ஜிஷ்னு என்ற நபருடன் வீட்டை விட்டு சென்றது தெரிய வந்தது.
போலீசார் மேலும் விசாரணை செய்ததில், ஜிஷ்னுவிற்கும் இலக்கியாவிற்கும் இடையில் 6 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஜிஷ்னுவின் அண்ணனுக்கு இலக்கியா பக்கம் பக்கமாக இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், ஜிஷ்னுவுடன் பல இடங்களில் ஊர் சுற்றியதாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததாகவும், இதனால் கர்ப்பமடைந்து 6 மாதங்களில் கலைத்ததாகவும் கூறியிருந்தார். இந்த தகவலும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, கணவரை ஏமாற்றி நகையை திருடி சென்ற வழக்கில் இலக்கியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பாதி நகைகள் மீட்கப்பட்ட நிலையில் மீதி நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.