நெல்லை,
நெல்லை பேட்டை பகுதியில் 540 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய பெண்ணை கைது செய்த போலீசார், அந்த அரிசியை பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது பேட்டை மைலப்பபுரத்தில் ஒரு வீட்டின் முன்பு தகர செட்டில் 540 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கொம்பையா மனைவி பாலா (வயது 50) என்பவர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.