தமிழக செய்திகள்

அங்கன்வாடி மையத்தில் 3 வயது குழந்தையின் தங்க கம்மல் திருட்டு: பெண் கைது

இது குறித்து சுகன்யா அளித்த புகாரின் பேரில் வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தம்மம்பட்டி,

கெங்கவல்லி அருகே அங்கன்வாடி மையத்தில் 3 வயது குழந்தை அணிந்திருந்த தங்க கம்மல் திருடி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்து, நகையை மீட்டனர்.

அங்கன்வாடி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் தெற்குமேட்டைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது 3 வயது மகள் சன்னித்தா, தென்கரையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று வருகிறார்.

சம்பவத்தன்று, குழந்தையை அவரது தாய் சுகன்யா அங்கன்வாடி மையத்தில் விட்டுவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் அங்கன்வாடி உதவியாளர், குழந்தை அணிந்திருந்த 2 கிராம் எடையுள்ள தங்க கம்மலயை மர்மப்பெண் ஒருவர் கழற்றிச் சென்றதாக சுகன்யாவுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சுகன்யா அளித்த புகாரின் பேரில் வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் மனைவி நதியா (38) குழந்தையின் தங்க கம்மலயை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, திருடப்பட்ட நகையை மீட்டனர்.

SCROLL FOR NEXT