தமிழக செய்திகள்

திருவள்ளூர் அருகே முகத்தில் ஆசிட் ஊற்றி பெண் கொடூர கொலை

அவர் அணிநது இருந்த நகைகள் அப்படியே உள்ள நிலையில் அருணா கொலை செய்யப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டிக்குப்பம் பகுதியில் மர்ம நபர்களால் முகத்தில் ஆசிட் ஊற்றி ஆந்திர பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகத்தில் ஆசிட் வீச்சு

பெரியபாளையம் அருகே உள்ள குப்பம் தொட்டாரெட்டி கிராமம். வெள்ளக் குளம் அருகில் உள்ள வயல் வெளி அருகே இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றி சிதைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஊதுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பெண் கொடூர கொலை

இதில் கொலையுண்ட பெண் ஆந்திர மாநிலம், நாகலாபுரம் அருகே நின்ரை,சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (40) என்பது தெரிந்தது. அவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை அருகே உள்ள பதட்டூர் கண்டிகை கிரா மத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார்.

கொலையாளிகள் யார்?

அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயம் இருந்தது. அவரது முகம் முழுவதும் எரிக்கப்பட்டது போல் கருப்பு கிரீஸ் பூசப்பட்டு இருந்தது, அவர் அணிந்து இருந்த தாலி மற்றும் கம்மல் உள்ளிட்டவை அப்படியே உள்ளன.

கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது. சம்பவ இடத்தில் செல்போன் ஒன்று கிடந்தது.

அதனை கைப்பற்றி போலீ சார் பல்வேறு கோணங்க ளில் விசாரணை செய்து வருகிறார்கள். பெண் கொடூரமாக ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூரில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள்

திருவள்ளூர் மாவட்டத் தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். இதேபோல் கடம் பத்தூர் பகுதியில் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய தகராறில் வாலிபர் கொல்லப்பட்டார்.

தற்போது ஊத்துக் கோட்டை அருகே பெண் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சத்தை கொள்ளையர்கள் அள்ளி சென்று உள்ளனர்.