தமிழக செய்திகள்

திருமணமான 4 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கணவர் உள்பட 3 பேர் கைது!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த தீபிகா (23), கடந்த ஜனவரி 28-ஆம் தேதி வல்லரசு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

வரதட்சணை கொடுமை

திருமணமான சில நாட்களிலேயே கணவர் மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணையாக பணம், நகை கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

தூக்கிட்டு தற்கொலை

இதனால் மனவேதனையில் இருந்த தீபிகா, தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

3 பேர் கைது

இதுகுறித்து தீபிகாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், கணவர் வல்லரசு, மாமனார் விநாயகம், மாமியார் சித்ரா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.