தமிழக செய்திகள்

சாத்தான்குளத்தில் கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி,

சாத்தான்குளம் பகுதியில் கடன் தொல்லை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் தொல்லை; பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காந்திநகர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கணபதி என்பவரின் மனைவி அழகம்மாள் (வயது 38). இவர் கடன் தொல்லையால் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் காரணமாக, தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அழகம்மாள் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடன் தொல்லை காரணமாக பெண் தற்கொலை செய்துகொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT