தமிழக செய்திகள்

பெண் தீக்குளித்து தற்கொலை

ஓசூரில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்

ஓசூர் ஆவலப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 48). இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத விரக்தியில், நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீக்காயங்களுடன் போராடிய அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT