தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மனைவி சின்னப் பொண்ணு(வயது 35). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 22-ந் தேதி மேல ஒட்டங்காடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அரு கில் சின்னப்பொண்ணு 100 நாள் வேலை திட்டத்தில் செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பலா மரத்தில் இருந்து 3 பலாப்பழங்கள் சின்னப் பொண்ணுவின் தலையில் விழுந்தன. இதில் பலத்த காயம் அடைந்த சின்னப்பொண்ணு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.