தமிழக செய்திகள்

மின்னல் தாக்கி பெண் பலி

மின்னல் தாக்கி பெண் பலியானார்.

ஆலங்குளம் அருகே உள்ள ஏ.லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வயலுக்கு மக்காச்சோள பயிர்களுக்கு உரமிடும் வலைக்காக சென்றார். அப்போது மின்னல்தாக்கியதில் பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாக்கியலட்சுமியின் உடலை கபற்றி பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

SCROLL FOR NEXT