தமிழக செய்திகள்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதை யாரோ மர்மநபர் அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் வடிவேல் மனைவி சுலோச்சனா (வயது 42). சம்பவத்தன்று இவர் தனது மகள் அஸ்வினி என்பவருடன் கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு சென்றிருந்தார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு தனியார் பஸ்சில் புறப்பட்டார். அப்போது 2 பவுன் வளையல், 1% பவுன் மோதிரம், ரூ.1000 ரொக்கம், 1 செல்போன் ஆகியவற்றை மணிபர்சில் வைத்து அதை ஒரு கட் டைப்பையில் வைத்திருந்தார்.

உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் பிரிவு ரோடு பகுதியில் பஸ் வந்ததும், சுலோச்சனா தனது கட்டை பையை பார்த்தபோது, நகை-பணம் வைத்திருந்த மணி பர்சை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதை யாரோ மர்மநபர் அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதுகு றித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT