தமிழக செய்திகள்

காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ

திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. சசிமோகன் விசாரணை செய்து புகாரில் உண்மை தன்மையை உறுதி செய்து ராஜகோபாலை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

பழனி,

பழனி மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் செயல்பட்டு வரும் தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜகோபால். 9காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண்ணை விசாரணை செய்த ராஜகோபால் அவரின் செல்போன் எண்ணை வாங்கி வைத்துள்ளார். வீட்டிக்கு சென்ற பெண்ணிற்கு ராஜகோபால் அடிக்கடி செல்போனில் அழைத்துப் பேசியுள்ளார்.

இந்தநிலையில் அந்த பெண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தியும் ராஜகோபால் அனுப்பி தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ராஜகோபால் தொல்லை தாங்க முடியாமல் தனது பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட பெண் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக பழனி டி.எஸ்.பி. தனஞ்ஜெயனிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் செல்போன் குறுஞ்செய்தி ஆதாரங்களுடன் புகார் அளித்து உள்ளனர்.

புகாரை பெற்று விசாரணை செய்த டி.எஸ்.பி. தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் மதுரை ஆயுதப்படை மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. சசிமோகன் விசாரணை செய்து புகாரில் உண்மை தன்மையை உறுதி செய்து ராஜகோபாலை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். காவல்துறையில் புகார் நிலையத்திற்கு அளிக்க வந்த பெண்ணிற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.