தமிழக செய்திகள்

தென்காசி அருகே வாழைத்தோட்டத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு

சுரண்டையில் விவசாயத் தோட்டத்தில் எரிந்த நிலையில் 50-வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வாழைத்தோட்டத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை - சுந்தரபாண்டியபுரம் சாலையில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இதில் வாழை மற்றும் பூசணி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று காலை அந்த வழியே வந்தவர்கள் அந்தத் தோட்டத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்ததோடு, காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சுமார் 45 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT