தமிழக செய்திகள்

பெண் அளித்த புகார்: பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நீக்கம்

பெண் அளித்த புகாரை தொடர்ந்து அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னை,

பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளராக கருப்பு முருகானந்தம் இருந்து வந்தார். இவர் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து, கட்சிப் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக அந்த பெண் அளித்த புகாரை தொடர்ந்து அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நீக்கம்

இந்நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT