நாகர்கோவில்
காட்டாத்துறையை அடுத்த வட்டவிளையைச் சேர்ந்தவர் டென்சிங் (வயது 57). தொழிலாளியான இவருடைய மனைவி பிரேமா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். டென்சிங்கிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் மதுகுடிக்க அடிக்கடி மனைவியிடம் அவர் பணம் கேட்டு தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று டென்சிங் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் பிரேமா பணம் இல்லை என மறுத்ததோடு, அவரை வீட்டில் விட்டுவிட்டு ஆலயத்துக்கு சென்றார்.
அங்கு பிரார்த்தனையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிய போது பிரேமாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வீட்டின் அறையில் மின்விசிறி மாட்டும் இரும்பு கொக்கியில் தூக்கில் தொங்கிய நிலையில் டென்சிங் அசைவற்று கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர். ஏற்கனவே டென்சிங் இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.